பாகிஸ்தானுக்கு இடையே உறவுகள் விரிசலடைந்து வரும் நிலையில், தாலிபன் தலைமையிலான ஆப்கான் ஆட்சிக்கு இந்தியா டன் கணக்கில் மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இதனால் இருநாட்டு உறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும், தாலிபன் மீண்டும் தலைமைக்கு வந்ததற்குப் பிறகு சமீபத்தில் தாக்குதல் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தாலிபன் தலைமையிலான ஆப்கான் ஆட்சிக்கு இந்தியா டன் கணக்கில் மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளது. இதுகுறித்து இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில், ஆப்கான் - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தொடர் மோதல்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மருந்துகள் வாங்குவதைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2025 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த மோதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமர் அப்துல் கானி பரதார், பாகிஸ்தானிய மருந்துகளின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி உடனடியாகத் தடை விதித்தார். அதேநேரத்தில், இந்தியா, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து மருந்துகளை வாங்குமாறு வலியுறுத்தினார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய மருந்து ஏற்றுமதி வேகமாக அதிகரித்தது. 2024-25 நிதியாண்டில் காபூலுக்கு $108 மில்லியன் மதிப்புள்ள மருந்துகளை அனுப்பியுள்ளது. 2025ஆம் ஆண்டின் மீதமுள்ள காலத்தில் $100 மில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஆப்கானிஸ்தான் சந்தையில் உள்ள அனைத்து மருந்துகளிலும் 70% பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட மருந்துகளாக இருந்தன. தவிர, அடிப்படையான மருத்துவப் பொருட்களுக்குக் கூட பாகிஸ்தானையே நம்பியிருந்தது. 2024ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு $186.69 மில்லியன் மதிப்புள்ள மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியின்போது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போதைப்பொருட்களுக்கு முழுமையான தடையை விதித்தது. இது நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தியதுடன் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. தவிர, இதன்மூலம் போலியான மருந்துப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. மருந்துகளின் பற்றாக்குறைக்குப் பிறகே ஆப்கான் இந்தியாவின் உதவியை நாடியது. அதன் விளைவே, தற்போது ஆப்கானுக்கு இந்தியா டன் கணக்கில் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்களை அனுப்பியது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ரேபிஸ் மற்றும் ஹெபடைடிஸ்-பி போன்ற நோய்களுக்கான 4.8 டன் தடுப்பூசிகளையும், உயிர் காக்கும் கருவிகளையும் அனுப்பியிருந்தது. அதேபோல் 2022ஆம் ஆண்டு பூகம்பத்தின்போதும் இந்தியா மருந்துப் பொருட்களை அனுப்பியிருந்தது. இதற்கிடையே இந்தியாவின் மருந்துப் பொருட்களை ஆப்கான், அதிகளவில் இறக்குமதி செய்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துருக்கியிடமிருந்து பெறப்பட்ட விலையைவிட, 4 மடங்கு விலை குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பாகிஸ்தானிய மருந்துகளை மாற்றுவதற்குக் காரணம் எனச் சில மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.