அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும் அந்நாட்டின் மூத்த செனட்டருமான லிண்ட்சே கிரஹாமின் (Lindsey Graham), திடீர் மரணம், அமெரிக்க அரசியலிலும் சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபருடனான தனது செல்வாக்கிற்காக 'ட்ரம்ப்பின் ரகசிய ஆலோசகர்' என்று அடிக்கடி வர்ணிக்கப்படும் கிரஹாம், வெள்ளை மாளிகைக்கும் செனட் சபைக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாகப் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, உக்ரைன், இஸ்ரேல் மற்றும் ஈரான் விவகாரங்களில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி, வாஷிங்டன் டி.சியில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார்.
முதற்கட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கையின்படி, மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய 'அயோர்டிக் டிசெக்ஷன்’ ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அவரது மரணச் செய்தி வெளியானதும், இணையத்தில் சதிக் கோட்பாடுகள் குறித்த யூகங்களும் வெளியாகின. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மீது கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தி, கிரஹாம் உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிது காலத்திலேயே அவரது மரணம் நிகழ்ந்ததைக் குறிப்பிட்டு, பல மாகா (MAGA) பிரமுகர்கள் அவரது மரணத்தைக் கேள்விக்குள்ளாக்கினர்.
MAGA பாட்காஸ்டரான கிளின்ட் ரஸ்ஸல், ”லிண்ட்சே கிரஹாமை ரஷ்யாதான் குண்டு வைத்துத் தகர்த்திருக்க கணிசமான வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸின் முன்னாள் தயாரிப்பாளரான கைலி ஜேன் கிரெமர், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) அச்சுறுத்தல்களைக் குறிப்பிட்டு, இதில் ஈரானுக்குத் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதில் ரஷ்யா அல்லது ஈரான் பின்னணியில் இருப்பதாக சிலர் குற்றஞ்சாட்டினாலும், அதன் எந்தவிதமான சதிச் செயலுக்கும் ஆதாரம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அவரது உக்ரைனின் சமீபத்திய பயணமும், ஈரானின் அச்சுறுத்தலும் இந்த மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.