ஈராக்கில் 23 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கப் படைகள் செப்டம்பர் 30 அன்று வெளியேற உள்ளன. சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக 2003இல் ஈராக்கில் நுழைந்த அமெரிக்கா, தற்போது வெளியேறுகிறது. ஈராக் பாதுகாப்புப் படைகள், ISIS போன்ற தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் வலிமை பெற்றதால், அமெரிக்க ராணுவ உதவி தேவையில்லை என கருதப்படுகிறது.
செய்தியாளர் ; M.மீரா
ஈராக்கில் 23 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியேற உள்ளன. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் அலி அல் ஜைதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து முகாமிட்டிருப்பதற்கான தேவை இனி இல்லை என கருதுவதாக தெரிவித்தார்.
தங்கள் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறினாலும் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என ஈராக் பிரதமர் அலி ஜைதி தெரிவித்தார். சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக 2003ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஈராக் மீது தாக்குதல் நடத்தின. அப்போதிருந்து அமெரிக்கப் படைகள் ஈராக்கில் நிலைகொண்டுள்ளன
ஈராக் பாதுகாப்புப் படைகள் (ISF) தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் அளவுக்குத் திறன் பெற்றுள்ளது. மேலும் 2014-ஐவிட தற்போது ஈராக் பாதுகாப்புப் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) போன்ற தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு ஈராக் அதிக வலிமையுடன் இருக்கிறது. எனவே, அமெரிக்க ராணுவத்தின் உதவி இனி தேவையில்லை என ஈராக் அரசு கருதுகிறது.
முழுமையான பாதுகாப்பு பணிகளுக்குப் பதிலாக, ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் பங்கிற்கு அமெரிக்கா மாற விரும்புகிறது. மேலும் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஈரான்-ஆதரவு ஆயுதக் குழுக்களால் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இதனால், அமெரிக்க வீரர்களின் பாதுகாப்பு முக்கியக் கவலையாக உள்ளது. மேலும், நீண்டகால வெளிநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான செலவைக் குறைக்க அமெரிக்க நிர்வாகங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்காவின் ராணுவக் கூட்டணி முடிவுக்கு வருவதையொட்டி, அந்நாட்டின் வணிக நிறுவனங்கள் ஈராக்கில் முதலீடு செய்யவுள்ளன. இனி இரு நாடுகளின் உறவு ராணுவக் கூட்டணியில் இருந்து முழுமையான பொருளாதார மற்றும் வர்த்தகக் கூட்டாண்மையை நோக்கி நகரவுள்ளது என்றும் கூறப்படுகிறது.