உலகம்

லீப் ஆண்டிற்கான அறிவியல் ரீதியான காரணம் என்ன தெரியுமா?

webteam

லீப் ஆண்டு என்பது என்ன? இதற்கு அறிவியல் ரீதியான காரணம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

28 நாள்களை மட்டும் கொண்டிருக்கும் பிப்ரவரி மாதம் எப்போதும் தனித்துவம் பெறுகிறது. இந்த மாதம் லீப் ஆண்டில் மட்டும் போனசாக கூடுதலாக ஓர் நாளை சேர்த்துக் கொள்கிறது. லீப் ஆண்டு என்பது என்னவென்றால், அதனை பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வரும் கால அளவிலிருந்து கணக்கிடத் தொடங்க வேண்டும்.

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர, 365 நாட்கள், 5 மணி நேரம் 49 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. வழக்கமாக 365 நாள்கள்தான் ஓர் ஆண்டு என கணக்கிடப்படுகிறது. ‌மீதமுள்ள 5 மணி நேரம் 49 வினாடிகள், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு 366 நாள்களாக கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 நாள்களோடு, லீப் ஆண்டு என அழைக்கப்படுகிறது.

லீப் ஆண்டு என்ற‌ முறையை, போப் கிரிகோரி முதல்முறையாக 1582 ஆம் ஆண்டில் கொண்டுவந்தார். லீப் ஆண்டு நான்கால் வகுபட வேண்டும். நூற்றாண்டு எனில் 400 ஆலும் வகுபட வேண்டும். பூமி சூரியனைச் சுற்றி வரும் கால அளவைக் கொண்டு லீப் ஆண்டு கணக்கிடப்படுவதால், பருவ நிலைகளில் மாற்றம் ஏற்படாது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.