காலநிலை மாற்றத்தை அதிகரிக்கும் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் முதல் 5 நாடுகளில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா ஆகியவை உலகளாவிய வெளியீட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக நாடுகள் மொத்தம் 54.1 பில்லியன் டன் வாயுக்களை வெளியிட்டுள்ளன.
காலநிலை மாற்றம் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அதற்கு தீர்வு காண உலக நாடுகள் துருக்கியில் கூடி விவாதித்து வருகின்றன. கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் பூமிப்பந்தின் வெப்ப நிலை உயர்வுக்கு காரணமாகி இயற்கை சீற்றங்களுக்கு வித்திடுகின்றன. பசுங்குடில் வாயுக்களை அதிகமாக வெளியிடும் முதல் 5 நாடுகள் எவை என பார்க்கலாம்.
கடந்தாண்டு மட்டும் 54.1 பில்லியன் டன் பசுங்குடில் வாயுக்களை உலக நாடுகள் வெளியிட்டுள்ளன. இதில் சீனா முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு இந்நாடு 15.98 பில்லியன் டன் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வெளியீட்டில் 29.5% ஆகும். 6.02 பில்லியன் டன் வாயு வெளியீட்டுடன் 11.1% பங்குடன் அமெரிக்கா 2ஆவது இடம் பிடித்து இருக்கிறது.
4.51 பில்லியன் டன் வாயு வெளியீட்டுடன் 8.3% பங்களிப்புடன் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. உலகில் வெளியாகும் பசுங்குடில் வாயுக்களில் பாதியை இம்மூன்று நாடுகளே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியன் 3.12 பில்லியன் டன் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டு 3.12% பங்குடன் 4ஆவது இடம் பிடித்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா 2.57 பில்லியன் டன் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டுள்ளது. இது உலகளாவிய வெளியீட்டில் 4.8% ஆகும். பிற நாடுகள் 21.9 பில்லியன் டன் வாயுவை வெளியிட்டுள்ளன. இதன் பங்கு 40.5% ஆகும்.