கச்சா எண்ணெய் X
உலகம்

”போர் நின்றாலும் உடனடி பலன் இருக்காது” - நிபுணர்கள் கூறுவது என்ன?

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தாலும் அதன் பலன் சாமானிய மக்களை எட்ட சில மாதங்களுக்கு மேல் ஆகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

PT WEB

பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த நிலையில் தான், போர் முடிவுக்கு வருவதாக ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.இதன் உடனடி தாக்கம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலித்து ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது.

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தாலும் அதன் பலன் சாமானிய மக்களை எட்ட சில மாதங்களுக்கு மேல் ஆகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் சிக்கியுள்ள நிலையில் அவை வெளியே வந்து உரிய இடங்களுக்கு செல்ல சில வாரங்களாவது ஆகும். மேலும் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பானது என கப்பல் நிறுவனங்களும் காப்பீட்டு நிறுவனங்களும் திட்டவட்டமாக உறுதிசெய்த பின்னரே புதிய கப்பல்கள் அதன் வழியே செல்லமுடியும்.

ஹார்முஸ் நீரிணை

இவை ஒருபுறம் இருக்க போரால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடங்கவும் சில வாரங்கள் பிடிக்கும். ஈராக்கில் இதற்கு ஓராண்டு கூட ஆகலாம் எனக்கூறப்படுகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அது நிலையானதா என்பதை ஓரிரு மாதங்கள் காத்திருந்து உறுதிசெய்த பின்னரே நிறுவனங்கள் தங்கள் பணியை முழுவீச்சில் தொடங்கும். இதுபோன்ற காரணங்களால் எரிபொருள் உற்பத்தி, விநியோகம் சீரடைந்து கச்சா எண்ணெய் விலை குறைய சில மாதங்களாவது ஆகும் எனத் தெரிகிறது.