உலகம்

'வெல்கம் டூ ஹெல்' : மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு ஆச்சரிய வரவேற்பு

webteam

ஜெர்மன் நாட்டில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. 

ஜெர்மனியில் இன்று ஜி-20 மாநாடு தொடங்குகிறது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு போராட்டக்காரர்கள் சுமார் 1 லட்சம் பேர் கருப்பு உடைகளை அணிந்து 'வெல்கம் டூ ஹெல்' என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, போலீசார் அவர்களை கண்ணீர் குண்டு வீசி கலைத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் போலீசார் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டள்ளனர்.