உலகம்

கீரைச் செடிகளுடன் தவறுதலாக வளர்ந்த கஞ்சா செடி.. கீரையை சாப்பிட்டவர்கள் நேர்ந்த பரிதாபம்

JananiGovindhan

பேபி ஸ்பினச் என்ற கீரை வகையை சாப்பிட்டதால் ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேலான மக்கள் கடுமையான உடல்நல பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழல் நிலவுகிறது.

அந்த கீரை வகையை உண்டவர்களுக்கு hallucinations எனும் சித்த பிரம்மை பிடித்தது போலவும், மயக்கம், கண்கள் மங்கலாக இருப்பது என பல உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் விசாரித்த போது காஸ்ட்கோவில் உள்ள riviera form என்ற பண்ணையில் பாதுகாப்பற்ற முறையில் விளைவிக்கப்பட்ட பேபி ஸ்பினச்சால் இந்த பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது என கண்டறியப்பட்டிருக்கிறது.

அதன்படி, பண்ணையில் கீரை விளைவிக்கும் போது தவறுதலாக போதை தரும் கஞ்சா செடியும் போடப்பட்டிருக்கிறது. இதனால் கீரை வகைகள் மாசுபட்டிருக்கிறது. அந்த நச்சு கலந்த கீரையை மக்கள் சாப்பிட்டதன் காரணமாகவே இந்த உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லேண்ட், விக்டோரியா உள்ளிட்ட பல நகரங்களில் 190க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியிருப்பதாக இதுவரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கவலைக்கிடமான பாதிப்புகளோ, இறப்புகளோ இதனால் நிகழவில்லை என்றும் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.