உலகெங்கும் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு வளர்ச்சி வீதம் வேகமாக அதிகரித்து வருவதாக ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில்லியனர்கள் என வகைப்படுத்தப்படும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 2024இல் ஆயிரத்து 275 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் இது முந்தைய ஆண்டில் இருந்ததை விட 170 லட்சம் கோடி ரூபாய் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சொத்து மதிப்பு வளரும் வீதம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெரும் பணக்காரர்கள் சொத்து மதிப்பு அதிவேகமாக உயரும் நிலையில் அவர்களுக்கு அரசுகள் அதிகளவில் வரி விதிக்கவேண்டும் என்றும் இதன்மூலம் மனிதர்களிடையிலான ஏற்றத்தாழ்வை ஓரளவு சரி செய்ய முடியும் என்றும் மனித உரிமைகள் அமைப்பான ஆக்ஸ்ஃபேம் பரிந்துரைத்துள்ளது. பில்லியனர்கள் சொத்தில் பெரும்பகுதி, பெரும்பாலும் நியாயமற்ற வகையில் வந்துள்ளதாகவும் பெரும் பணக்காரர்கள் செல்வம் கொழிக்கும் நிலையில் அவர்களிடம் ஆட்சி அதிகாரமும் சேர்ந்துள்ளதை எலான் மஸ்க்கை சுட்டிக்காட்டி இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.