கொரிய தீபகற்பத்தில் இன்னொரு போர் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜீ-இன் கூறியுள்ளார்.
தென் கொரியாவின் அதிபர் பதவிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு அதிபர் மூன் ஜீ-இன், "கொரிய தீபகற்பத்தில் இன்னொரு போர் நடக்க அனுமதிக்க மாட்டோம். ஏவுகணை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்துவது தொடர்பாக வடகொரியாவுடன் பேச்சு நடத்துவதற்காகச் சிறப்புப் பிரதிநிதிகளை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
60 ஆண்டுகளுக்கு முன் நடந்த யுத்தத்தில் இருந்து நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு மக்கள் உழைத்து வரும் நிலையில், இன்னொரு போரில் அனைத்தையும் இழந்துவிட விரும்பவில்லை. வடகொரியா ஏவுகணைகள் மூலம் சூதாட்டம் நடத்துவதை கைவிட வேண்டும்" என்றார்.