துனிசியாவில் 4 வருடங்களாக பெண்ணின் சிறுநீர்ப்பையில் சிக்கி இருந்த கண்ணாடி டம்ளரை நீண்ட போராட்டத்திற்குபின் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
துனிசியாவைச் சேர்ந்த 45 வயதான பெண் 4 வருடங்களாக சிறுநீரகப் பாதை தொற்றால் அவதிப்பட்டு வந்தார். சிறுநிர் கழிக்கும்போது கடுமையான வலி ஏற்பட்டதால் மருத்துவரை அணுகினார். அங்குள்ள மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். சிறுநீர்ப்பையில் 8 செ.மீ அகலத்தில் செவ்வக வடிவத்தில் கல் போன்று பொருள் ஒன்று இருப்பதை பார்த்து மருத்துவரே குழம்பிப் போனார்.
பின்னர் செய்த சோதனைகளில் அது கல் அல்ல., கண்ணாடி டம்ளர் என்பது தெரிய வந்துள்ளது. நோயாளியுடன் மருத்துவர் விசாரித்தபோது கண்ணாடி டம்ளர் உள்ளே இருப்பது தனக்கு தெரியும் என்றும் அதை உள்ளே வைத்ததே தான் தான் என்றும் கூறியுள்ளார். 4 வருடங்களுக்கு முன் பாலியல் இன்பம் பெற கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாகவும், அது எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து “சிஸ்டோலிதோடோமி” அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் சிறுநீர்ப்பையில் இருந்த கண்ணாடி டம்ளரை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாகவும், இது போன்ற செயல்களை செய்ய வேண்டாமென்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.