உலகம்

வெள்ளத்தில் சிக்கிய கார்; விளையாட்டாக வெளியேறிய இளைஞர்

வெள்ளத்தில் சிக்கிய கார்; விளையாட்டாக வெளியேறிய இளைஞர்

webteam

பெரு நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து சாவகாசமாக தப்பித்து இளைஞர் ஒருவர் வெளியேறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

லிமா நகரிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கனிடி நகரில் வெள்ள பாதிப்பில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் கார் ‌ஒன்று ஆற்று வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர் பெரிய பாறை ஒன்றில் கார் மோதி சாய்ந்து நின்றது. இதில் காரின் முன் கண்ணாடி உடைந்ததால் ஓட்டுனர் அதன் வழியாக வெளியே வந்து உயிர் தப்பினார். இந்தக் காட்சிகள் ஊடகங்களில‌ வேகமாக பரவி வருகிறது.

பெரு நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள பாதிப்புக்கு கொலம்பியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, போர்வை, கொசுவலை, தற்காலி‌க கூடாரம் உள்ளிட்ட 30 டன் அளவிலான பொருட்களை விமானம் மூலம்‌ அனுப்பியுள்ளது.