உலகம்

நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்ட 41 ஆண்டு கால ஆற்றுப்பாலம்

webteam

சீனாவில் இருந்த 41 ஆண்டுகள் பழமையான பாதுகாப்பற்ற ஆற்றுப்பாலம் நொடிப் பொழுதில் தகர்க்‍கப்பட்டது. 

சீனாவின் ஜாங்கிங் நகரில் உள்ள யுஜியாங் ஆற்றுப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. 41 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் பழுதடைந்ததை அடுத்து, அதனை தகர்த்துவிட்டு புதிய பாலம் கட்ட  அதிகாரிகள் முடிவு செய்தனர். யுஜியாங் ஆற்றுப்பாலத்தை தகர்க்‍க திட்டமிடப்பட்டதை அடுத்து, அதன் சுற்றுப்பகுதிகளில் வசித்து வந்த 10,000 க்‍கும் மேற்பட்ட மக்‍கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, பாலத்தில் சுமார் 3000 துளைகள் இடப்பட்ட, ஒன்றரை டன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து, அந்த பாலம் நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டது.