உலகம்

கொரோனா எதிரொலி: அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்த தடை

கொரோனா எதிரொலி: அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்த தடை

webteam

அமெரிக்காவில் கொரோனா பரவி வருவதை தடுக்கும் வகையில், இசை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வடமேற்கு மாகாணங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதற்கு தடை விதித்து ஆளுநர் ஜே இன்ஸ்லீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குறிப்பாக இசை நிகழ்ச்சிகள், விழாக்கள், விளையாட்டுக்கள், நம்பிக்கைச் சார்ந்த விஷயங்கள் ஆகியன நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்லீ கூறுகையில், “இந்த தொற்றுநோயின் பரவலை நாம் குறைக்க நமது மாநிலத்திற்கு இன்னும் தீவிரமான, விரிவான மற்றும் ஆக்ரோஷமான நடவடிக்கை தேவை என்பது தெளிவாகிறது. ஏனென்றால் இது ஒரு வைரஸ் காய்ச்சலை விட 10 மடங்கு அதிக ஆபத்தானது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேயர் லண்டன் பிரீட் கூறும்போது, “இந்த உத்தரவு சீர்குலைக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இது பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.