உலகம்

ட்ரம்ப்பும் நானும் காதலித்தோம்: மாடல் அழகி பகீர் புகார் !

ட்ரம்ப்பும் நானும் காதலித்தோம்: மாடல் அழகி பகீர் புகார் !

Rasus

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது காதல் வயப்பட்டதாகவும், அவருக்கும் தன் மீது காதல் இருந்ததாக பிரபல "பிளேபாய்" பத்திரிகையின் மாடல் அழகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக மாடல் அழகி ஒருவர் கூறியுள்ளார். மாடல் அழகியான கரேன் மெக்டொகல் தொலைப்பேசி நேர்காணல் ஒன்றில் பேசும்போது, கடந்த 2006ம் ஆண்டு ட்ரம்ப் மீது கிட்டத்தட்ட 10 மாதங்கள் அளவிற்கு காதலில் இருந்தேன். அடிக்கடி அவரும் என்னை காதலிப்பதாக தெரிவிப்பார் ” எனக் கூறி திடுக்கிட வைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கடந்த பிப்ரவரி மாதம், அதிபர் ட்ரம்பிற்கு கரேன் மெக்டொகல் உடன் காதல் இருந்ததாகவும், இதுதவிர மற்றொரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் கரேன் மெக்டெகால் தற்போது அதனை நேர்காணலில் உறுதி செய்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டதில் இருந்து ட்ரம்ப் தன்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் கரேன் மெக்டொகல்லின் செய்திக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துவிட்டது. ட்ரம்பிற்கு அப்பெண் மீது காதல் ஏதும் இல்லை எனவும் கூறிவிட்டது.