உலகம்

“பெர்க்‌ஷ்யர் நிறுவனத்தில் எனக்கு பிறகு இவர்தான்!” வாரன் பபெட் அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

“பெர்க்‌ஷ்யர் நிறுவனத்தில் எனக்கு பிறகு இவர்தான்!” வாரன் பபெட் அறிவிப்பு

பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் வாரன் பபெட்டை பலருக்கும் தெரிந்திருக்கும். 90 வயதான இவர் நீண்டகாலமாக நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கு அடுத்து யார் என்பது பல ஆண்டுகளாக அமெரிக்க முதலீட்டு உலகில் இருந்து வரும் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலையில் க்ரெக் அபெல் புதிய தலைவராக இருப்பார் என வாரன் பபெட் அறிவித்திருக்கிறார். எனக்கு எதாவது நடக்கும் பட்சத்தில் அடுத்த நாள் முதல் க்ரெக் என்னுடைய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என அமெரிக்க ஊடகத்துக்கு பதில் அளித்திருக்கிறார்.

பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் அல்லாத பகுதியை க்ரெக் கவனித்துவருகிறார். ஒருவேளை க்ரெக் தொடரமுடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக அஜித்ஜெயின் பொறுப்பேற்றுக்கொள்வார் என வாரன் அறிவித்திருக்கிறார்.

2006- ஆண்டு 75 வயதை தொட்டதில் இருந்தே வாரனுக்கு அடுத்து யார் என்னும் விவாதம் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கேள்விக்கு விடைகிடைத்திருக்கிறது.

இந்த இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் துணைத்தலைவர்களாக செயல்பட்டுவருகின்றனர். இருவருமே சிறப்பானவர்கள் என்றாலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஏற்ப தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டி இருப்பதால் க்ரேக் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக க்ரெக்-க்கு 59 வயதாகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜித் ஜெயினுக்கு 69வயதாகிறது.

இந்த முடிவுக்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.