உலகம்

ஆபாச நடிகை விவகாரம்: ஷேன்வார்ன் விடுவிடுப்பு

ஆபாச நடிகை விவகாரம்: ஷேன்வார்ன் விடுவிடுப்பு

webteam

ஆபாச பட நடிகையை தாக்கியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன். இவர், லண்டனில் உள்ள இரவு விடுதிக்கு சென்றிருந்தார். அங்கு பிரபல ஆபாச பட நடிகை, வலேரி பாக்ஸ் என்பவரை கன்னத்தில் தாக்கியதாக புகார் எழுந்தது. இதை வலேரி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். ’பெண் ஒருவரை தாக்கியதற்காக பெருமை கொள்வீர்களா?’ என்று கூறியிருந்தார். இந்தச் செய்தி பரபரப்பானது. இந்நிலையில் இந்தப் புகார் தொடர்பாக மத்திய லண்டன் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

இதுபற்றி கூறிய வார்ன்,  ‘என்னை பற்றி வெளியான தவறான செய்திகளை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் யாரையும் தாக்கவில்லை. இதுபற்றிய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்’ என்று கூறியிருந்தார். அதே போல ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்த சம்பவத்தில் வார்ன் அப்படி ஏதும் செய்யவில்லை என்று தெரியவந்ததால் அந்தப் புகாரில் இருந்து வார்ன் விடுவிக்கப்பட்டுள்ளார்.