அமெரிக்காவுடன் போர் நடத்துவது வடகொரியாவுக்குப் பேரழிவாக முடியும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் எச்சரித்திருக்கிறார். வடகொரியா விவகாரத்தைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று அமெரிக்கா இன்னும் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அணு ஆயுதச் சோதனை, ஏவுகணைச் சோதனை ஆகியவற்றால், அதிருப்தியடைந்த அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான நவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ.நா. பாதுகாப்பு அவையில் வடகொரியாவுக்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் வளைந்து கொடுக்காத வடகொரியா, அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவைத் தாக்கப்போவதாக தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான திட்டத்தை இறுதி செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறது.