உலகம்

34 ஆண்டுகளாக வெடிக்கும் உலகிலேயே சூடான எரிமலை!

34 ஆண்டுகளாக வெடிக்கும் உலகிலேயே சூடான எரிமலை!

webteam

ஹவாய் தீவில் கடந்த 34 ஆண்டுகளாக வெடித்துக் கொண்டிருக்கும் கிலுவேயா எரிமலை தான் உலகின் சூடான எரிமலையாகும்.

ஹவாயில் உள்ள பெரிய தீவான கெபிக் என்ற பகுதியில் இந்த எரிமலை அமைந்துள்ளது. இது சுமார் 6 லட்சம் ஆண்டுகள் பழமையானது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 1983ஆம் ஆண்டு முதல் வெடித்து வரும் இந்த எரிமலை, தொடர்ந்து நெருப்புக் குழம்பை வெளியேற்றி வருகிறது. 

கடந்த 2014ஆம் ஆண்டில் கிலுவேயாவின் வெடிப்பு சற்று அதிகரித்து சாலைகளில் நெருப்புக் குழம்பு வழிந்தது. இந்த எரிமலைக்கு அருகில் உள்ள பஹோவா எனும் நகரில் வசிக்கும் மக்கள்  அவ்வப்போது சீறிக் கொண்டிருக்கும் இந்த எரிமலை ஒரு நாள் பொங்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதனிடையே கிலுவேயாவில் இருந்து வழியும் லாவாவின் அளவு அதிகரித்துள்ளதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.