உலகம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல் நிலை தொடர்ந்து மோசம்? - மீண்டும் பரவும் தகவல்கள்

Abinaya

கடந்த சில மாதஙக்ளுக்கு முன்பு உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் உடல்நிலை குறித்த செய்திகள் தொடர்ந்து பரவி வந்தன. பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியம் போது, அவரது உடல்மொழி மற்றும் பேசும் விதம் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பி வந்தன.

உரையாற்றும் போது அவரது கைகள் நடுங்குவதுவதையும் அவரது தோலின் தோற்றங்களில் இருக்கும் மாற்றங்களையும் குறித்து செய்திகள் வெளியிட்டு வந்தன. தனது உடல் உபாதைகளை மறைக்க மேக்கப் போட்டு கொள்கிறார் என்றும் அவர் தன்னுடைய இமேஜையை பாதுக்காக்க மெனக்கெடுகிறார் என தகவல்கள் வெளிவந்தன.

இதனை தொடர்ந்து, புதின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பதால் அனுமானங்கள் தொடர்ந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஸ்கை நியூஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவரது கைகளுக்கு மேல் பரப்பில் இருக்கும் தோல்கள் கருப்பு நிறமாக மாறியிருப்பதை குறித்து கேள்விகள் எழுந்ததுள்ளன.

காரணம், உடலில் வேறு எந்த பகுதியிலும் ஊசி செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்குகே தொடர்ந்து கைகளின் வழி ஊசி செலுத்தப்படும். அவ்வாறு தொடர்ந்து செலுத்தப்படும் போது அந்த பகுதி கருமை நிறத்துக்கு மாறிவிடும்.

இதை நரம்புவழி சிகிச்சை (IV) ட்ராக் மார்க் என்று சொல்லப்படுகிறது. இப்போது புதினுக்கு 70 வயதாகிறது. 1990ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவின் அரசு பணியில் இணைந்த புதின், தொடர்ந்து அசாத்திய நகர்வுகள் மூலம் 2000ஆண்டு ரஷ்யாவின் அதிபரான அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மிகவும் சவாலன ஆட்சியை தான் புதின் எதிர்கொண்டார். எனவே இவரது ஆரோக்கியம் மீதான கவனம் அதிகரித்து வருகிறது.