உலகம்

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு சிறை: தென் ஆப்ரிக்காவில் வெடித்தது வன்முறை

Veeramani

தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டத்தை கண்டித்து நடைபெற்று வரும் கலவரத்தை ஒடுக்க படைவீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாத சிறைத்தண்டனை, கடந்த புதன்கிழமையிலிருந்து தொடங்கியது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரை விடுவிக்க வலியுறுத்தி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் என்ற பெயரில் கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்படுகின்றன.

ஆண், பெண், குழந்தைகள் என வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கடைகளில் புகுந்து பொருட்களை தூக்கிச் செல்கின்றனர். பல வாகனங்களும் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த வன்முறைகளால் இதுவரை 6-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் அதிகம் பாதிக்கப்பட்ட க்வாஜூலூ-நேட்டல் மற்றும் காவ்டெங் மாகாணங்களில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.