உலகம்

மிக்கி மவுசின் பிறந்தநாள் ! புகைப்படங்கள் ஏலம்!

webteam

லண்டனில் ஏலம் விடப்பட்ட மிக்கி மவுசின் புகைப்படங்கள் மூலம் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மிக்கி மவுஸ் கார்ட்டூனை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு உலக பிரபலம் தான் மிக்கி மவுஸ். மிக்கி மவுசை உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி. எலியை வைத்து ஒரு `மார்டிமர் மவுஸ் என்ற கார்ட்டூனை உருவாக்கினார் டிஸ்னி. `மார்டிமர் மவுஸ்' என்ற பெயர் வேண்டாமென்றும், வேறு பெயர்  வைக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார் டிஸ்னியின் மனைவி.  அதனால் தன் மனைவி பரிந்துரை செய்த பெயரையே தனது கார்ட்டூனுக்கு வைத்தார் டிஸ்னி.  அந்த பெயர் தான் ''மிக்கி மவுஸ்''

அப்படி உருவான மிக்கி மவுஸ், அமெரிக்காவின் அனிமேஷன் குறும்படமான ‘ஸ்டீம்போட் வில்லி’ மூலம் 1928ம் ஆண்டு நவம்பர் 18ல் அறிமுகமானது. இதன்மூலம் உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுசின் 90வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. மிக்கியின் பிறந்தநாளை முன்னிட்டு அதன் அரிய புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டன.

ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்திய மதிப்பில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கிடைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.