உலகம்

மறைந்தது உலகின் வயதான கொரில்லா!

மறைந்தது உலகின் வயதான கொரில்லா!

webteam

உலகின் வயதான பெண் கொரில்லா தனது 60 வயதில் மரணத்தை தழுவியுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் 1957-ம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படும் கொரில்லா, விலா. பெண் கொரில்லாவான விலா, பின்னர் கலிபோர்னியாவில் உள்ள சான் டீகோ, மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு வளர்ந்து வந்த கொரில்லா, பணியாளர்களுடன் பாசமாக பழகியதாம். 

கடந்த சில வருடங்களாக முதுமை காரணமாக, தளர்ந்த நிலையில் இருந்த விலா, வியாழக்கிழை மறைந்துவிட்டதாக சான் டீகோ மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது. பொதுவாக கொரில்லாக்கள் 35-ல் இருந்து 40 வருடங்கள் மட்டுமே உயிர் வாழும். ஆனால், இந்த விலா, 60 வருடம் வரை வாழ்ந்ததாகவும் அதன் மறைவு தங்களுக்கு பேரிழப்பு என்றும் மிருகக் காட்சி சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.