உலகம்

மல்லையா வழக்கு: லண்டனில் இன்று விசாரணை

மல்லையா வழக்கு: லண்டனில் இன்று விசாரணை

Rasus

கடன் ஏய்ப்பு வழக்கில் கைதாகியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு விசாரணை லண்டனில் இன்று நடைபெறுகிறது.

9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள மல்லையா இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அங்கு கைது செய்யப்பட்ட மல்லையா தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான மனுவின் மீது நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்க உள்ளனர். மல்லையாவை அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதித்தால் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.