அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தண்டவாளத்தில் விழுந்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொலிஜியம் ரயில் நிலைய நடைமேடையில் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த நபர், திடீரென நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். எதிர்பாரதவிதமாக அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது.
இதனை பார்த்துக்கொண்டிருந்த பயணிகளில் ஒருவர், தண்டவாளத்தில் விழுந்த நபரின் கையை பிடித்து மேலே தூக்கினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர்தப்பினார். ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இந்த காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.