தாய் சிறுத்தை ஒன்று தன் குட்டிகளை பத்திரமாக சாலையைக் கடக்க வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரைலாகி வருகிறது.
தாய்ப்பாசத்தில் மனிதர்கள், விலங்குகள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. அனைத்து உயிர்களிலும் தாய் என்பது தனிச்சிறப்பானது என்பதை அவ்வப்போது சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அப்படி ஒரு தாய் சிறுத்தையின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த பழைய சம்பவமாக இருந்தாலும், இந்த வீடியோவை மீண்டும் இணையவாசிகள் வைரலாக்கியுள்ளனர்.
சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றிருக்க சாலையை ஒருபார்வை விட்டுச்செல்லும் தாய் சிறுத்தை பிறகு தன் குட்டிகளை அழைத்துச்செல்லும். பாதி தூரம் சாலையைக் கடந்ததும் ஒரு குட்டி சாலையிலேயே படுத்துக்கொள்ளும், மீண்டும் வரும் தாய் சிறுத்தை தன் வாயால் குட்டியை கவ்வி செல்லும் திசை நோக்கி இழுக்கும், மீண்டும் அந்த குட்டி தன் தாயுடன் சேர்ந்து சாலையைக் கடக்கும்.
இந்த வீடியோவை பலரும் ஷெர் செய்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். வனத்துறை அதிகாரி பிரவீன் கஷ்வானும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தாய் சிறுத்தையிடம் இருந்து சாலை விதிகளை கற்றுக்கொள்ளலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.