பாதுகாப்புத் தேவைகளுக்காக இந்தியா ரஷ்யாவைச் சார்ந்திருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜான் கிர்பி, “ இந்தியா மற்றும் பிற நாடுகள் பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் அதை ஊக்கப்படுத்தவில்லை” என்று கூறினார்.
மேலும், "நாங்கள் இந்தியாவுடன் வைத்திருக்கும் பாதுகாப்பு கூட்டாண்மையையும் மதிக்கிறோம். இந்த விவகாரத்தில் முன்னோக்கி செல்வதற்கான வழிகளை நாங்கள் பார்க்கிறோம். இந்த விஷயம் தொடரும், ஏனெனில் இது முக்கியமானது. இந்த பிராந்தியத்தில் இந்தியா பாதுகாப்பு வழங்குநராக உள்ளது. நாங்கள் அதை மதிக்கிறோம்" என்று தெரிவித்தார்
உக்ரைன் மீது ரஷ்யா இரண்டு மாத காலமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த சூழலில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.