உலகம்

வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் ! அவசர நிலை பிரகடனம்

வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் ! அவசர நிலை பிரகடனம்

jagadeesh

இத்தாலியின் வெனிஸ் நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு‌ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கிய அழகிய வெனிஸ் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையாலும் கடல் சீற்றம் ஏற்பட்டு தண்ணீர் புகுந்ததாலும் 50 ஆண்டுகள் கண்டிராத சேதத்தை அந்நகரம் எதிர்கொண்டுள்ளது. UNESCO மரபுடைமை நகரமாக திகழும் வெனிஸிலுள்ள தேவாலயங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், கட்டடங்கள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தை தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவாரணப்பணிக்காக முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் புனித மார்க்ஸ் சதுக்கத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.