வெனிசுலா நிர்வாகத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பே கட்டுப்படுத்துகிறார். மேலும் அங்குள்ள எண்ணெய் வளத்தை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்முன்னாள் அதிபர் மதுரோவின்கீழ் கையெழுத்தான 19 எண்ணெய், எரிவாயு உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தங்களை வெனிசுலாவின் இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது.
போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் அமெரிக்கா படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். தற்போது அமெரிக்க சிறையில் உள்ள அவர்கள், இதுதொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே, மதுரோ கைது நடவடிக்கைக்குப் பிறகு துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும், வெனிசுலா நிர்வாகத்தை அதிபர் ட்ரம்பே கட்டுப்படுத்துகிறார். மேலும் அங்குள்ள எண்ணெய் வளத்தை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார். தவிர, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் அமெரிக்க கருவூலத்திற்குச் செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரோவின் கீழ் கையெழுத்தான 19 எண்ணெய், எரிவாயு உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தங்களை வெனிசுலா அரசு ரத்து செய்துள்ளது.
நலிவடைந்த எண்ணெய் துறையில் வெளிநாட்டு முதலீட்டை எளிதாக்குவதற்காக, வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் ஜனவரி மாத இறுதியில் நாட்டின் ஹைட்ரோகார்பன் சட்டத்தில் ஒரு சீர்திருத்தத்தை நிறைவேற்றியது. சீர்திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ், ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திற்கு ஆறு மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன்படி, வெனிசுலா அமைச்சகம் எண்ணெய் சார்ந்த நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அவர்கள் தங்கள் திட்டங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட எண்ணெய் வயல்களை விரிவுபடுத்த அனுமதிக்கின்றனர். அதேநேரத்தில், சிலவற்றை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும், கராகஸ் மற்றும் வாஷிங்டன் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சில நிறுவனங்கள் அறியப்படாதவை என்றும் கூறப்படுகின்றன. இதையடுத்து, வெனிசுலா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் அவற்றில் கையெழுத்திட்ட நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை மதிப்பாய்வு செய்து வருகின்றன.