மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 68வது உலக அழகி பட்டத்தை வென்றார். இவருக்கு கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டத்தை சூட்டினார்.
வனிசா போன்ஸ் டி லியோன் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் மெக்ஸிகன் ராணி ஆவார். 26 வயதான வனிசா போன்ஸ் டி லியோன் சர்வதேச வர்த்தகத்தில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது பெண்கள் மறுவாழ்வு மையத்திற்கான குழு ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தேசிய இளைஞர் நிறுவனம் ஒன்றில் பேச்சாளராகவும் மற்றும் மாடலிங், தொகுப்பாளர் வேலையும் செய்து வருகிறார்.
68வது சர்வதேச அழகி அலங்கார அணிவகுப்பு அமைப்பு கான்டினென்டல் குயின்ஸ் க்ரீன்ஸின் முதல் ஐந்து அழகு ராணிகளை தேர்வு செய்ய புது வடிவத்தை உருவாக்கியது. அதிலிருந்து முதல் 30 பேரை தேர்வு செய்தது. அதை 12 ஆக குறைத்து அரை இறுதியில் 5 போட்டியாளர்களை தேர்வு செய்தது. அதில் 68வது உலக அழகியாக மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் தேர்வு செய்யப்பட்டார்.
வனிசா போன்ஸ் டி லியோனியின் தலையில் கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் கிரீடத்தை சூட்டினார். அப்போது, வனிசா இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்து கண் கலங்கியவாறு புன்னகைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,”என்னால் நம்ப முடியவில்லை. நிஜமாகவே நம்ப முடியவில்லை. நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். எல்லோருக்கும் மிகவும் நன்றி” எனத் தெரிவித்தார்.