உலகம்

கனடாவில் வேனை ஓட்டிச் சென்று தாக்குதல்: 10 பேர் உடல் நசுங்கி பலி

கனடாவில் வேனை ஓட்டிச் சென்று தாக்குதல்: 10 பேர் உடல் நசுங்கி பலி

webteam

கனடாவில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதியதில் 10 பேர் உடல்நசுங்கி பாலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். இதில் தீவரவாத தாக்குதலாக இருக்கும் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

கனடாவில் உள்ள டொரன்டோ நகர், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒன்று. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இங்கு நேற்று மாலை வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை டொரன்டோ புறநகர் பகுதியில் வசிக்கும் அலெக் மினாசியன் (Alek Minassian) என்பவர் ஓட்டிச் சென்றார். சாலையின் ஓரத்தில் ஏராளமான பாதசாரிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

(மோதிய வேன்)

இதையடுத்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரை வர் கைது செய்யப்பட்டார். இதற்கு பின்னணியில் தீவிரவாதத் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

டொரன்டோ தலைமை போலீஸ் அதிகாரி மார்க் சவுண்டர்ஸ் கூறும்போது, ’இதை விபத்து என்று கருத முடியாது. இது வேண் டுமென்ற செய்யப்பட்டது போல் உள்ளது ’ என்று தெரிவித்துள்ளார். நேரில் பார்த்தவர்களும், வேண்டுமென்றே வேகமாக வந்து பாதசாரிகள் மீது மோதியதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலு ம்  விசாரணை நடைபெற்று வருகிறது.