உலகம்

இலங்கை அரசை நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்: வைகோ

இலங்கை அரசை நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்: வைகோ

webteam

இனப்படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலளார் வைகோ வலியுறுத்தினார்.

ஐநா மானித உரிமைகள் ஆணையத்தில் பங்கேற்று பேசிய வைகோ, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். அத்துடன் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு சர்வதேச நீதிமன்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
இலங்கையில் தமிழர்களை கொன்று ‌குவித்த, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவும், முன்னாள் ராணுவ அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்‌ என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் ஐநா கூட்டத்தில் வைகோ பலமுறை பேசுகிறார் என்றும் இனி அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கக் கூடாது எனவும் சிங்களர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.