அமெரிக்கா சென்று படிக்க வேண்டும்.. பணிபுரிய வேண்டும் என்ற பலரது கனவுகளையும் ஒரே வார்த்தையில் முடித்து வைத்துள்ளார் அதிபர் டிரம்ப்...அவர் போட்ட உத்தரவு தான் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனல்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற நாளில் இருந்து பலவேறு அதிரடி திட்டங்களையும் சீர் திருத்தங்களையும் கொண்டு வந்தார்.
குறிப்பாக பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இந்த வரிவிதிப்புக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் "மிகப்பெரிய ஒரு அழகிய மசோதா" என்ற பெயரில் மசோதா ஒன்றை நிறைவேற்றினார். அதில், தொழில்முனைவோர்கள்,மாணவர்கள் சுற்றுலா பயணிகள், விசா பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் .இந்த தொகை பண வீக்கத்தின் படி ஆண்டுதோறும் மாறுபடும் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இருப்பு தொகை என்ற பெயரில் இந்த தொகை வசூலிக்கப்படுவதாகவும், இந்த தொகை குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி திருப்பி அளிக்கப்படும் எனவும் டிரம்ப் கூறியிருந்தார். குறிப்பாக விசா காலாவதி ஆகிவிட்டால் நீட்டிப்பு கோராமல் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறினால் மட்டுமே இந்த தொகை திருப்பி அளிக்கப்படும் என அதிர்ச்சி கொடுத்தார் டிரம்ப் முக்கியமாக, மாணவர்கள், சுற்றுலா பயணிகளின் எச்பி1 விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ள சம்பவம் தான் பலரையும் அதிர வைத்துள்ளது. 16 ஆயிரம் ரூபாயாக இருந்த விசா கட்டணம் தற்போது 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது அனைத்து வகை விசாக்களுக்கும் பொருந்தும் என்றும் ஏற்கனவே உள்ள விசா விண்ணப்ப கட்டணங்களுடன் சேர்த்து விசா வழங்கப்படும் நேரத்தில் இந்த கூடுதல் கட்டணத்தையும் அமெரிக்கா பாதுகாப்பு துறை வசூலிக்கும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு தான் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது..