உலகம்

கொரோனாவில் இருந்து வணிகர்கள் மீள உதவும் கடன் தொகை: தவறாக பயன்படுத்தியதாக தொழிலதிபர் கைது!

EllusamyKarthik

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் தொழிலில் நலிவுற்ற சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் தொழிலை மீண்டும் கட்டமைத்து கொள்வதற்காக கடன் கொடுக்கும் திட்டத்தின் மூலம் தவறாக பயன் அடைந்த தொழிலதிபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். 

மிசிசிப்பி பகுதியை சேர்ந்த 45 வயதான கிறிஸ்டோபர் பால் லிக் தான் வங்கியில் தவறான விவரங்களை கொடுத்து சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளார். அந்த தொகையை கொண்டு வீடு, கார் மற்றும் பங்கு சந்தை முதலீட்டையும் மேற்கொண்டு சொகுசான வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இந்திய மதிப்பில் 44 கோடி ரூபாயாகும். 

ஆனால் வங்கியில் ஊழியர்கள் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்காக அந்த தொகையை செலவிட்டதாக தெரிவித்துள்ளார் அவர். தொடர்ந்து கிறிஸ்டோபர் பால் லிக் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.