உலகம்

வடகொரியாவுக்கு அமெரிக்கா மீண்டு‌ம் பகிரங்க எச்சரிக்‌கை

வடகொரியாவுக்கு அமெரிக்கா மீண்டு‌ம் பகிரங்க எச்சரிக்‌கை

webteam

அணுகுண்டு சோதனை நடத்தியுள்ள வடகொரியாவுக்கு அமெரிக்கா மீண்டும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

‌உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்திய‌தால், கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த சோ‌‌தனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, தங்களுக்கோ, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கோ விடுக்கப்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்க்கும் திறன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளி‌கையில் செய்தியாளர்களை சந்தித்த ‌அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் எந்தவொரு ஆபத்தையும் ‌எதிர்கொள்ளும் வகையில் வடகொரியா மீது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம் என‌ எச்சரித்துள்ளா‌ர். ஜப்பான், தென்கொரியா ‌உள்ளிட்ட நட்பு நாடுகளை ‌பாதுகா‌க்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், வடகொரியா மீது பலவிதமான தாக்குதல்களை நடத்த வழிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.