உலகம்

'ரஷ்யா மீது கடும் பொருளாதார தடை விதிக்க நேரிடும்' - கமலா ஹாரிஸ் எச்சரிக்கை

JustinDurai

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா போரை விரும்பவில்லை என்று கூறினாலும் அதன் செயல்பாடுகள் நம்பத் தகுந்ததாக இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் எல்லை அருகே ரஷ்யா போர் விமானங்களை நிலை நிறுத்தி தனது படைகளை பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் உக்ரைன் எரிவாயு ஆலை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ரஷ்யா உக்ரைனை நோக்கி முன்னேறினால், இதுவரை இல்லாத வகையில் கடுமையான பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று கமலா ஹாரிஸ் எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைன் பதற்றம் - ஏவுகணை பயிற்சியை தொடங்க உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் புதின்