கச்சா எண்ணெய் Pt web
உலகம்

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா.. 5 நாடுகள் மீது 100% வரி.. ஆயத்தமாகும் அமெரிக்கா!

ரஷ்யா உக்ரைன் மீது நடத்திவரும் போருக்கான நிதி ஆதாரத்தை முடக்குவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

Prakash J

அமெரிக்க செனட் உறுப்பினர்களின் இருகட்சி (Democrat & Republican) குழு ஒன்று, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா உள்ளிட்ட ஐந்து (சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அசர்பைஜான்) முக்கிய நாடுகள் மீது 100% வரை இறக்குமதி வரி (Tariff) விதிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது எரிசக்தி தேவையை ஈடுசெய்ய ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, சவூதி அரேபியா போன்ற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றது. இதற்கிடையே, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில், ரஷ்யா எண்ணெய் விலையைக் குறைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வந்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அமெரிக்கா, அதிக வரி விதிப்பதாக இந்தியாவை மிரட்டியதுடன் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளையும் விதித்தது. இதற்கிடையே மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பெற்றுக்கொள்ள தற்காலிகமாக சலுகை அளித்தது.

ட்ரம்ப் -புடின்

இந்த நிலையில், அமெரிக்க செனட் உறுப்பினர்களின் இருகட்சி (Democrat & Republican) குழு ஒன்று, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா உள்ளிட்ட ஐந்து (சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அசர்பைஜான்) முக்கிய நாடுகள் மீது 100% வரை இறக்குமதி வரி (Tariff) விதிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க செனட்டர்களான ரிச்சர்ட் புளூமெந்தல் (Richard Blumenthal - ஜனநாயகக் கட்சி) மற்றும் அண்மையில் காலமான லிண்ட்சே கிரஹாம் (Lindsey Graham - குடியரசுக் கட்சி) ஆகியோரால் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டது. ரஷ்யா உக்ரைன் மீது நடத்திவரும் போருக்கான நிதி ஆதாரத்தை முடக்குவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். ரஷ்யா தனது எரிசக்தி ஏற்றுமதி மூலம் பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

ட்ரம்ப்

முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட வரைவில், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை மிகக் கடுமையான வரி விதிக்க முன்மொழியப்பட்டது. ஆனால், உலகளாவிய வர்த்தகம் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான உறவைக் கருத்தில் கொண்டு, தற்போதைய திருத்தப்பட்ட மசோதாவில் இது 100% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபருக்கு இந்த வரிகளில் இருந்து விலக்கு அளிக்கும் சிறப்பு அதிகாரம் இந்த மசோதாவில் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளைக் கருத்தில் கொண்டு அதிபர் தேவைப்பட்டால் சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கலாம். இந்த மசோதாவிற்கு அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.