களம் இறங்கிய அமெரிக்கா
களம் இறங்கிய அமெரிக்கா முகநூல்
உலகம்

பதிலடி கொடுக்க ஆணிவேரில் கை வைத்த ஈரான்.. ஒரு கை பார்க்க களம் இறங்கிய அமெரிக்கா..அலறும் உலகநாடுகள்!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஈரான் இஸ்ரேல் மீது வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், தற்போது இஸ்ரேயலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இரண்டு ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால், கோபமடைந்த ஈரான் இந்த தாக்குதலை நடத்திய இஸ்ரேல் மீது தற்போது வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேயலுக்கு ஆதரவாக தற்போது அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளதால் அப்பகுதியில் பெரும் போர் பதற்றத்தை நிலவிவருகிறது. இந்நிலையில், ஈரானிய ட்ரோன்களை அமெரிக்கா ராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது. மேலும், சிரியாவிலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையில் ஆலோசனை

முன்னதாக, அமெரிக்காவில் தனது கடற்கரை இல்லத்திற்கு மேற்கொண்டிருந்த பயணத்தை இத்தாக்குதல் காரணமாக ரத்து செய்துவிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசரமாக வெள்ளை மாளிகை திரும்பினார். இந்நிலையில், இத்தாக்குதலை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

ஏற்கெனவே, இஸ்ரேல் - காசாவிற்கு இடையே போர் நிலவியபோது இஸ்ரேயலுக்கு தேவையான போர் உதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை அமெரிக்கா தொடர்ந்து வழங்கியது. இதேபோல தான், தற்போது ஈரான் நடத்திய தாக்குதலிலும் அமெரிக்கா எல்லவித உதவிகளையும் இஸ்ரேயலுக்கு வழங்குவது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதன்காரணமாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரோன்களை தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்கா ராணுவம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக 50 க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்கள் இஸ்ரேயலை நோக்கி ஏவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலால் ஏற்படும் பாதிப்பு?

மேலும், அமெரிக்கா கடற்படை கப்பல்கள் இத்தாக்குதலில் இஸ்ரேயலுக்கு உதவி வருகிறது. இதனால், சிரியா , ஈரான் பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும் கச்ச எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, இஸ்ரேயலின் கப்பல் ஒன்று ஈரான் இராணுவத்தால் கைப்பற்ற நிலையில் போர் மேகங்கள் வளைக்குடாப் பகுதிகளை சூழந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை ஈரானை எதிரி நாடாகவும் , இஸ்ரேயலை தனது நட்பு நாடாகவும் கருதுவதால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும்,  இஸ்ரேல் ராணுவத்தின் ரேடார் , ஜி.பி.எஸ் உள்ளிட்டவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தீடீர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் பல நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.