modi, trump meta ai
உலகம்

இந்தியா ஒரு ராஜதந்திர கூட்டாளி.. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அதிகாரி பேச்சு!

இந்தியா வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ராஜதந்திர கூட்டாளி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

PT WEB

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர், இந்தியாவை முழுமையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய ராஜதந்திரக் கூட்டாளி என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 50 விழுக்காடு வரிவிதிப்பால் இந்திய- அமெரிக்க உறவுகள் சிக்கல் அடைந்திருக்கும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் Tommy Piggot இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை அவசியம்..

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இம்மாதம் 31ஆம் தேதி சீனாவுக்குச் செல்லவுள்ளார். அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள இந்திய அரசு சீனா, ரஷ்யா நாடுகளுடன் நெருக்கமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

trump, modi

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிக்கோட், இந்தியாவுடனான வர்த்தக சமநிலையின்மை மற்றும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது ஆகியவை குறித்து தனது கவலைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினார். வெளியுறவு கொள்கைகளில் அனைத்து விஷயங்களிலும் 100% உடன்பட வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கவலைகளை போக்குவதற்கு இந்தியாவுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை அவசியம் என்று Piggot வலியுறுத்தினார்.