யுனெஸ்கோ, ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

இது 3வது முறை.. யுனெஸ்கோவிலிருந்து விலகும் அமெரிக்கா!

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா மீண்டும் விலகுவதாக அறிவித்துள்ளது.

PT WEB

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா மீண்டும் விலகுவதாக அறிவித்துள்ளது. 2026 டிசம்பர் முதல் இது நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்திருப்பதாக வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான பாரபட்சமான நிலைப்பாட்டை யுனெஸ்கோ கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

யுனெஸ்கோ

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா யுனெஸ்கோவிலிருந்து விலகுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 1984இல் ரீகன் நிர்வாகத்தின் போதும், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்திலும் விலகியிருந்தது. பாலஸ்தீனத்தை ஒரு உறுப்பு நாடாகச் சேர்ப்பதற்கு யுனெஸ்கோ வாக்களித்த பிறகு, அமெரிக்காவும் இஸ்ரேலும் 2011 முதல் யுனெஸ்கோவுக்கு நிதி வழங்குவதை நிறுத்திவிட்டன.