அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும் பல மாற்றங்களை கொண்டுவந்தார். குடியேற்றச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுவதை அறிவித்ததும் முதல் வேலையாக, தங்களது நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி இருப்பவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது பலநாட்டினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அடுத்த அதிரடி நடவடிக்கையாக, முப்படை தளபதிகளின் தலைவரை பணிநீக்கம் செய்து அறிவித்துள்ளார். Joint Chiefs of Staff தலைவராக இருந்த ஜெனரல் சி.கியூ. ப்ரவுனை பணிநீக்கம்
செய்வதாகவும், அவருக்கு பதிலாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டான் ரேசின் கெய்னை நியமிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறையில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் அதிபர் ட்ரம்ப், அதன் ஒரு நடவடிக்கையாக மூத்த ராணுவ அதிகாரியை மாற்றி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் பாதுகாப்ப படைகளின் தலைமைத் தளபதியாக பணியாற்றிய 2 கறுப்பினத்தவர்களில் ஒருவர் பிரவுன் ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 மாதங்களாக தலைமைத் தளபதியாக இருந்த பிரவுன்
ஜூனியர் உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு போரில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்