உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 3 வாரங்களை கடந்துள்ளது. போரை நிறுத்துமாறு பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்ய அதிபர் செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடின் ஒரு போர்க் குற்றவாளி என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். முன்னதாக புடினை போர்க் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க: உலக இணையத்திலிருந்து பிரிய விரும்பும் ரஷ்யா... காரணம் என்ன?