உலகம்

12 ஆயிரம் அடி உயரத்தில் விமானங்களை “SWAP” செய்ய முயற்சித்த விமானிகள்!

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவில் 12 ஆயிரம் அடி உயரத்தில் விமானங்களை மாற்றிக்கொள்ள விமானிகள் முயற்சி செய்த சாகசம் அரங்கேறியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது.

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த விமானிகள் லூக் அய்கின்ஸ் (வயது 48) மற்றும் ஆண்டி ஃபாரிங்டன் (வயது 39) இதுவரை யாரும் முயற்சித்துப் பார்க்காத ஒரு சாகச முயற்சியை மேற்கொண்டனர். விமானத்தில் பறந்து கொண்டிருக்கும்போதே இருவரும் தங்கள் விமானங்களை விட்டு வெளியேறி, மற்றவர் விமானம் கீழே விழும்முன்பு அதில் ஏறி அதை பறக்கவைக்கும் சாகச முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த முயற்சி நன்றாகத் தொடங்கியது. இருவரும் தங்கள் விமானங்களிலிருந்து முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அமைப்பில் குதித்தனர். ஆனால் சில நிமிடங்களில், லூக்கின் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லூக்கின் விமானத்திற்கு செல்லவேண்டிய ஆண்டி விமானத்தை பறக்கவிடுவதற்கான தனது திட்டங்களை கைவிட்டு, அதற்கு பதிலாக தரையில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் இறங்கினார். ஆனால் அதே நேரத்தில் ஆண்டி லூக்கின் விமானத்தில் ஏறி விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்து பறக்க வைத்தார்.