அமெரிக்க நாடாளுமன்றம் Reuters
உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம் என்ன? நூழிலையில் ட்ரம்ப் ஆட்சி!!

அமெரிக்க நாடாளுமன்றம் இடைக்கால தேர்தலை சந்திக்க உள்ளது. இச்சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சிகளின் தற்போதைய பலம் குறித்து இன்ஃபோ ஜி பகுதியில் பார்க்கலாம்.

PT WEB

அமெரிக்க நாடாளுமன்றம் செனட், பிரதிநிதிகள் சபை என இரு அவைகளை கொண்டதாகும். மேலவையான செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி இங்கு ஆளும் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சிக்கு 45 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர்கள் 2 பேர் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிப்பதால் அதன் பலம் 47 ஆக உள்ளது. இந்த அவையில் நூலிழை பெரும்பான்மையில்தான் அதிபர் ட்ரம்ப்பின் ஆளும் கட்சி உள்ளது.

Donald trump

கீழவையாகக் கருதப்படும் பிரதிநிதிகள் சபை மொத்தம் 435 உறுப்பினர்களை கொண்டது. இதில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு 218 உறுப்பினர்கள் உள்ளனர். ஜனநாயகக்கட்சிக்கு 214 உறுப்பினர்கள் உள்ளனர். 2 இடம் காலியாக உள்ள நிலையில் ஒரு சுயேச்சை உறுப்பினர் உள்ளார். இந்த அவையிலும் ஆளும் குடியரசுக் கட்சி நூலிழை பெரும்பான்மையே பெற்றுள்ளது.

அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ள நிலையில் அதில் 26இல் குடியரசுக் கட்சி ஆளுநர்களும் 24இல் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களும் உள்ளனர்.