US media outlets trump news Reuters
உலகம்

டிரம்ப் செய்தியை ஒளிபரப்பமாட்டோம்.. அமெரிக்க ஊடகங்கள் அதிரடி முடிவு.. கோபத்தில் டிரம்ப் வைத்த CHECK!

டிரம்ப் தொடர்பான செய்தியை ஒளிபரப்பமாட்டோம் என அமெரிக்க ஊடகங்கள் அறிவித்த நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையிலான நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார்.

Praveen Joshva L

அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல்முறை பொறுப்பேற்றதில் இருந்து அவர் அமெரிக்க ஊடகங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், பொய்யான செய்திகளை வழங்கி வருவதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த சூழலில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் CNN, MS NOW மற்றும் Politico ஆகிய பிரபல செய்தி நிறுவனங்கள் பொய்யான செய்திகளைப் பரப்புவதாகச் சொல்லி, அவர்களின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை சுழற்சி முறைத் திட்டத்தின்படி CNN நிறுவனம் செய்திகளைச் சேகரிக்க வேண்டிய நாளில், அந்த நிறுவனத்திற்கு வெள்ளை மாளிகை அனுமதி மறுத்தது.

டிரம்ப்

இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் டிரம்ப்பின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தன. அதோடு, டிரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், CNN-க்கு மாற்றாக வேறு எந்தக் கேமரா குழுவையும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப் போவதில்லை என Fox News, ABC, CBS, CNN, NBC உள்ளிட்ட அமெரிக்க முன்னணிச் செய்தி நிறுவனங்கள் ஒன்றுதிரண்டு முடிவெடுத்து அறிவித்தன.

அதோடு அமெரிக்க நீதிமன்றத்திலும் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் செய்தி சுதந்திரத்தை வழங்கும் அமெரிக்க அரசியல் சாசனத்தின் உரிமைகளை மீறும் வகையில் டிரம்ப் அரசு செயல்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதோடு டிரம்ப்பின் நேரலை நிகழ்வுகளை ஒளிபரப்புவதையும் அமெரிக்க ஊடகங்கள் நிறுத்தியுள்ளன.

டிரம்ப்

தன் மீதான குற்றசாட்டுகள் குறித்து தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில், நான் செய்தி சுதந்திரத்திற்கு எதிரானவன் அல்ல. ஆனால் பொய்யான செய்திகளைப் பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க ஊடகங்களின் தடைகளை முறியடிக்கும் வகையில், வெள்ளை மாளிகை மற்றும் டிரம்ப் தொடர்பான நிகழ்வுகளை ஒளிபரப்ப TRUMP TV என்ற புதிய யூடியூப் பக்கத்தை வெள்ளை மாளிகை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க ஊடகங்களுக்கும் டிரம்ப் அரசுக்கும் இடையேயான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியதாக பார்க்கப்படுகிறது.