உலகம்

கிரீன் கார்டு மசோதா நிறைவேற்றம்: அமெரிக்க இந்தியர்கள் மகிழ்ச்சி

Rasus

இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையிலான கிரீன் கார்டு தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணிபுரிய கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் 7 சதவிகிதம்தான் கிரீன் கார்டு வழங்க வேண்டும் என உச்சவரம்பு உள்ளது. இந்த உச்சவரம்பை நீக்குவதற்கான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

HR 1044 என்றழைக்கப்படும் இந்த மசோதா, 435 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் அவையில் 365 உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்களுக்கு இது பயனளிக்கும். இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற பல ஆண்டுகள் காத்துக்கிடக்க வேண்டி இருக்கிறது. 

இந்த மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டு, அதிபரின் ஒப்புதலைப் பெற்றால் நிரந்தர குடியுரிமைக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை இந்தியர்களுக்கு இருக்காது என சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய ஐடி ஊழியர்கள் இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.