மேற்கு இடாஹோவில் (Idaho) உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Gunfighter Skies Air Show என்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, அமெரிக்க கடற்படையின் இரண்டு EA-18G கிரௌலர் ரக போர் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன.
விமான சாகச நிகழ்ச்சியின்போது, இரண்டு அமெரிக்க கடற்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த விமானங்களில் பயணித்த நான்கு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறினர் .
தளத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில், விமானங்கள் நெருங்கிய அணிவகுப்புச் சாகசங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.