உலகம்

ஆப்கானில் ஆளில்லா விமான தாக்குதலில் பாக் தீவிரவாதி மரணம்

ஆப்கானில் ஆளில்லா விமான தாக்குதலில் பாக் தீவிரவாதி மரணம்

webteam

ஆப்கானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத தலைவர் ஒமர் காலித் கொராசனி என்பவர் கொல்லப்பட்டார். இவர் ஜமாத் உல் அஹ்ரார் என்ற பாகிஸ்தானின் தலிபான் குழுக் தலைவராவார். அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தானுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ள நிலையில் கொராசனி கொல்லப்பட்டுள்ளார். 

ஜமாத் உல் அஹ்ரார் அமைப்பு பாகிஸ்தானில் நடந்த பல்வேறு வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னணியாக இருந்துள்ளது. இந்த அமைப்பினர் கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று பாகிஸ்தானின் லாகூர் நகரில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திவிட்டு ஆப்கான் எல்லையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கும்படி அமெரிக்காவை பாகிஸ்தான் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.