டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அமெரிக்காவில் இருந்து ஒரு இந்தியர் வெளியேற்றம் - அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன் அமெரிக்காவில் அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கப் போவதாக எச்சரித்துள்ளார்

Jayashree A

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்ற பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. படிப்பதற்கு, வேலை செய்ய என பல்வேறு விஷயங்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவை நோக்கி படையெடுக்கவே செய்கிறார்கள். ஆனால், அதில் பெரும்பாலோனோர் சட்டப்படி விதிமுறைகளை பின்பற்றி சென்றாலும், சிலர் சட்டவிரோதமாக வேறு சில குறுக்கு வழிகள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர். இந்தப் பிரச்னை அமெரிக்க அரசியல் களத்திலும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதில் டொனால்டு ட்ரம்ப் கூடுதல் கவனம் செலுத்துபவர். அதாவது அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற முழக்கத்தை தொடர்ந்து முன் வைப்பவர்.

இந்தியாவில் இருக்கும் பல படித்த இளைஞர்களுக்கு அமெரிக்கா பற்றிய கனவு ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லுறவே பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. குறிப்பாக 1990-களுக்கு பிறகு இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்ய இந்தியர்கள் அதிகம் அமெரிக்கா செல்கிறார்கள். அமெரிக்க மக்கள்தொகையில் இப்போது கணிசமான அளவுக்கு இந்தியர்கள் உள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் அதிர்ச்சியாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது. அமெரிக்காவில் இருந்து 6 மணி நேரத்திற்கு ஒரு இந்தியர் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க அரசு தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தான் இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

ட்ரம்

அதாவது, 2021ம் ஆண்டை விட 2024ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையானது 400% அதிகரித்துள்ளது. 2021ல் 292 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா 2024ல் 1529 ஆக அதிகரித்துள்ளது. நாடு கடத்தல் என்பது இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்படுவதுதான்.

முக்கியமாக, 2024ல் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு இந்தியரை வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது அமெரிக்க குடிவரவு மற்று சுங்க அமலாக்க அமைப்பால் டிசம்பர் 19 அன்று வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?

உலகளவில் 2021ல் 59011 பேரையும் 2024ல் 271484 பேரையும் அமெரிக்கா நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது. அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இரு தரப்பு ஒப்பந்தங்கள் காரணமாக நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2024 இந்த அதிகரிப்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை குறைக்கக்கூடும் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த 2019 மர்றும் 2020 ஆண்டுகளில் 3928 இதியர்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டனர். ஜோ பைடனின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் 3467 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவிக்கப்படுள்ளது.

நவமபர் 2024 இல் ICE வெளியிட்ட அறிக்கையின்படி 14.4 லட்சம் சட்ட விரோத குடியேறிகள் நாட்டை விட்டுவெளியேற்றப்படுவார்கள் என்ற அபாயத்தில் உள்ளனர். அவர்களில் 17490 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.