உலகம்

வாகன நிறுத்துமிடத்தில் திருமணம்: செல்போனில் பார்த்து வாழ்த்திய உறவினர்கள்!

webteam

ஊரடங்கு அமலில் இருப்பதால் அமெரிக்காவில் ஒரு ஜோடிக்கு வாகன நிறுத்துமிடத்திலேயே திருமணம் நடைபெற்றது.

கொரோனா வைரசால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 7லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு ஜோடிக்கு வாகன நிறுத்துமிடத்திலேயே திருமணம் நடைபெற்றது.

கலிபோர்னியாவை சேர்ந்த அலிசன் மற்றும் செர்ஜியோ ஆகிய இருவருக்கும் ஹவாயில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பயணக் கட்டுப்பாடு போடப்பட்டதால் அவர்களால் ஹவாய்க்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் கலிபோர்னியாவிலேயே பதிவு திருமணம் செய்யமுடிவெடுத்தனர்.

ஹாக்கி விளையாட்டு மைதானத்தின் வாகன நிறுத்த பகுதியில் தற்காலிகமாக பதிவு துறை அலுவலகம் செயல்படுகிறது. எனவே அங்கேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் இதனை செல்போன்களில் நேரலையாக கண்டு ரசித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்